“உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” -பிரச்சாரத்தில் பங்கேற்கும் மு.க.ஸ்டாலின்

Published by
Venu

திருவண்ணாமலை மற்றும் ஆரணி ஆகிய தொகுதிகளில் நடைபெறும் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்”  பிரச்சாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. தமிழகத்தில் உள்ள கட்சிகள் அனைத்தும் தீவிரமாக பரப்புரையை மேற்கொண்டு வருகின்றனர்.அந்த வகையில், அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் திமுக மக்கள் கிராம சபை கூட்டம் தொடங்கி உள்ளது.கடந்த 10 ஆண்டு காலத்தில் அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு சந்தித்துள்ள அவலங்கள் – சரிவுகள் – தோல்விகளை மக்களுக்கு நினைவூட்டும் வகையில் இது தொடங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதிமுக சார்பில் “வெற்றிநடை போடும் தமிழகம்” என்ற தலைப்பில் தேர்தல் பரப்புரை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று முதல் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற புதிய கோணத்தில் தேர்தல் பிரசாரம் துவங்க உள்ளார்.காலை மாலை என 30 நாட்களுக்கு உங்கள் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் தொகுதியில் ஸ்டாலின் பிரச்சாரத்தில் மக்களிடம் விண்ணப்பம் தந்து பிரச்சனையை கேட்டு அறியப்படும் என்றும் விண்ணப்பத்தில் மக்கள் குறைகளை எழுதித் தந்தால் 100 நாள்களில் பிரச்சனை தீர்க்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
Venu

Recent Posts

தைப்பூசம் 2025 இல் எப்போது வருகிறது தெரியுமா?.

தைப்பூசம் 2025 இல் எப்போது வருகிறது தெரியுமா?.

உலகம் முழுவதும் கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழா இந்த ஆண்டு கொண்டாடப்படும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை காணலாம். சென்னை :முருகா..…

2 minutes ago

வேலூர் பாஜக நிர்வாகி கொலை : திமுக ஊராட்சி மன்றத் தலைவர் பாலா சேட் கைது!

வேலூர் : கடந்த டிசம்பர் 16ஆம் தேதி கே.வி.குப்பம் அருகே சாலை விபத்தில் சிக்கியது போல மர்மமான முறையில் படுகாயமுற்று…

2 minutes ago

கன்டெய்னர் லாரி கவிழ்ந்து அப்பளம் போல் நொறுங்கிய கார் – 2 குழந்தைகள் 6 பேர் உயிரிழப்பு.!

பெங்களூரு: பெங்களூரு அருகே நெலமங்களா பகுதியில் கார் மீது கன்டெய்னர் லாரி கவிழ்ந்த விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 2…

4 minutes ago

வீட்டிலேயே சுத்தமான கரம் மசாலா செய்வது எப்படி? அதன் மருத்துவ நன்மைகள் இதோ..

உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரும் கரம் மசாலாவை எப்படி தயாரிப்பது என்றும், அதன் மருத்துவ பலன்கள் பற்றியும் இச்செய்தி குறிப்பில்…

26 minutes ago

காதுல ரத்தம் வர வைக்கும் கருத்துக்கள்.. சூரி 10ல் 11… விடுதலை 2வை வாட்டி வதைத்த ப்ளூ சட்டை!

சென்னை: நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் நேற்றைய தினம் வெளிவந்த "விடுதலை 2" திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை…

57 minutes ago

ரூ.23 லட்சம் மோசடி! ராபின் உத்தப்பாவுக்கு கைது வாரண்ட்!

பெங்களூரு : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா பெங்களூருவில்…

2 hours ago