டெல்லியில் திமுக அலுவலகத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார்.
டெல்லியில் திமுக அலுவலகமான அண்ணா- கலைஞர் அறிவாலயத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார். அண்ணா- கலைஞர் அறிவாலயம் திறப்பு விழாவில் அரசியல் கட்சிகளின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். அண்ணா- கலைஞர் அறிவாலயம் திறப்பு விழாவில் சோனியா காந்தி, பா.சிதம்பரம், வைகோ, பரூக் அப்துல்லா, டி ராஜா, திருநாவுக்கரசர், கபில் சிபில் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும், தமிழக அமைச்சர்கள், திமுக எம்பிக்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர். டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகத்தில் கட்சிக் கொடியை முதலமைச்சர் மு.கஸ்டாலின் ஏற்றி வைத்தார். டெல்லி திமுக அலுவலகத்தில் குத்துவிளக்கை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஏற்றி வைத்தார்.
டெல்லி அண்ணா -கலைஞர் அறிவாலயத்தில் அண்ணா சிலையை துரைமுருகனும், கலைஞர் சிலையை டி.ஆர்.பாலு திறந்து வைத்தனர். பேராசிரியர் அன்பழகன் நூலகத்தை சோனியா காந்தி திறந்துவைத்தார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு சால்வை அணிவித்து முதலமைச்சர் நினைவு பரிசு வழங்கினார்.
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…
டெல்லி : இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையில், பாகிஸ்தால் தவறான செய்திகளும் பரப்பப்படுகின்றன. ஆம்…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் பாகிஸ்தானில் பிடிபட்டதாக கூறப்படும்…
சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…
காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…
டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…