எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்க தனக்கு உடன்பாடில்லை இன்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்துள்ளார்
மு.க ஸ்டாலின் தனது அறிக்கையில் அரசு விழா என்ற பெயரில் கட்சி அரசியலுக்காகவும், இலாப நோக்கத்துடனும் எம்.ஜி.ஆரின் பெயரைப் பயன்படுத்தும் இது போன்ற விழாக்களில் தனக்கு உடன்பாடில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா அழைப்பிதழில், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் தன்னுடைய பெயரை இடம்பெறச் செய்திருக்கும் அரசியல் பண்பாட்டை மதிப்பதாகவும் மற்றும் மாவட்டம் தோறும் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாக்களில் திமுக அதிக அளவில் விமர்சிக்கப்பட்டதை சுட்டி காட்டியுள்ள ஸ்டாலின், நிறைவு விழா என்பது, இன்றைய ஆட்சியாளர்களின் மிச்சமிருக்கும் அரசியல் பயணத்திற்காக மக்கள் வரிப்பணத்தில் அரசு செலவில் நடத்தப்படும் ஆடம்பரமான விழா என குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காமல், பல நூறு விளம்பர பேனர்களை மக்களின் போக்குவரத்திற்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ளதாகவும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவின் பின்னணியையும் உள்நோக்கத்தையும் புரிந்துகொண்டு தாம் அதில் பங்கேற்பதை தவிர்ப்பதாகவும் ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
DINASUVADU
கோவை : கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம் பல்லடம் : தெற்கு அவினாசிபாளையம், சக்தி நகர், கொடுவாய்,…
டெல்லி : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என…
சென்னை : இன்றயை காலகட்டத்தில் நாம் அதிகமாக பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக யூடியூப் உள்ளது. இதில் பொழுதுபோக்குக்காகவும், சில முக்கிய…
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 டி20 மற்றும்…
டெல்லி : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களுக்கு இடையே உள்ளஆண்டுகளில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான…
சென்னை : அமெரிக்காவின் ஹூஸ்டன் மாநகரத்தில் 1927ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும்…