நமது நாட்டு கடற்படையினரே, நமது மீனவர்களை சுட்டது வருத்தமளிக்கிறது. இதற்கான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற செயல்கள் மீனவர்களிடையே நம்பிக்கையின்மையையும், பாதுகாப்பற்ற உணர்வையும் இது ஏற்படுத்தும். என முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
நேற்று நள்ளிரவில் மன்னார் வளைகுடா பகுதியில் மீன்பிடித்துவந்த மயிலாடுதுறை மீனவர்களை சந்தேகத்தின் பேரில் எச்சரிப்பதற்காக இந்திய கடலோர காவல்படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் மயிலாடுதுறை மாவட்ட மீனவர் வீரவேல் என்பவர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது.
குண்டடிபட்ட மீனவர் வீரவேல் தற்போது மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விவகாரம் தொடர்பாக கடற்படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனை தொடர்ந்து குண்டடிபட்ட மீனவர் வீரவேலுக்கு நிவாரண தொகையாக 2 லட்சம் ரூபாய் முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து அளிக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், இந்திய கடற்படையினருக்கு, நமது மீனவர்களை எப்படி கையாள வேண்டும் என உரிய பயிற்சி மற்றும் விதிமுறைகள் அளிக்க வேண்டும். அடிக்கடி தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது பற்றி பிரதமருக்கு நன்கு தெரியும் என அறிவேன்.
நமது நாட்டு கடற்படையினரே, நமது மீனவர்களை சுட்டது வருத்தமளிக்கிறது. இதற்கான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற செயல்கள் மீனவர்களிடையே நம்பிக்கையின்மையையும், பாதுகாப்பற்ற உணர்வையும் இது ஏற்படுத்தும். மேலும் இதுபோல இன்னோரு சம்பவம் நிகழாமல் தடுத்து நிறுத்த வேண்டும்.
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…