#BREAKING: ஆளுநர் மாளிகைக்கு புறப்பட்ட மு.க.ஸ்டாலின்..!
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் சற்று நேரத்தில் பதவியேற்கயுள்ளார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், முக்கிய உயரதிகாரிகள், எம்எல்ஏக்கள் எதிர்க்கட்சித் தலைவர்கள், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஓ.பன்னீர் செல்வம், கே.எஸ்.அழகிரி, தினேஷ் குண்டு ராவ், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், வைகோ, முத்தரசன், சரத்குமார், கமல்ஹாசன், திமுக எம்.பி.கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் பதவியேற்பு விழாவில் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டார்.