தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொரோனா காலத்தில் மக்களுக்கு பல்வேறு வகையான உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில், தற்போது கொரோனா ஊரடங்கினால் வாழ்வாதாரம் இழந்து நலிவடைந்த நிலையில் காணப்படும் இயல், இசை, நாடக கலைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 நிதியுதவி வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தொடக்கி வைத்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (8.6.2021) தலைமைச் செயலகத்தில், நலிந்த நிலையில் வாழும் கலைஞர்களுக்கு மாதாந்திர நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ், 1000 கலைஞர்களுக்கு நிதி உதவி வழங்கும் அடையாளமாக 11 கலைஞர்களுக்கு நிதி ஒப்பளிப்பு ஆணைகளை வழங்கினார்கள்.
இதன்மூலம், தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறையின் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் வாயிலாக பொருளாதாரத்தில் நலிந்த நிலையில் வாழும் சிறந்த கலைஞர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர நிதி உதவி திட்டத்தின் கீழ், 2018-2019 மற்றும் 2019-2020 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கு தலா 500 நலிந்த கலைஞர்கள் வீதம் மொத்தம் 1000 நலிந்த கலைஞர்கள் பயனடைவார்கள். மேலும், நலிந்த கலைஞர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர நிதியுதவியை ரூ.2000/-த்திலிருந்து ரூ.3000/- ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் உள்ள 6600 அகவை முதிர்ந்த செவ்வியல் மற்றும் கிராமியக் கலைஞர்கள் பயன்பெறுவார்கள்.
இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப.. சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் மருத்துவர் பி. சந்திரமோகன், இ.ஆ.ப., கலை பண்பாட்டுத் துறை ஆணையர் திருமதி வ.கலையரசி, இ.ஆ.ப.. தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தலைவர் திரு. தேவா, உறுப்பினர் செயலாளர் திரு. தங்கவேலு, இ.ஆ.ப.(ஓய்வு) மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : உச்ச நீதிமன்றம், ஒரு முக்கியமான தீர்ப்பில், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க…
கோவை : கோவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பூத் கமிட்டி மண்டல கருத்தரங்கம் ஏப்ரல் 26 மற்றும் 27…
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2025 ஆம் ஆண்டு சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்…
சென்னை : அதிமுக – பாஜக வருகின்ற 2026 சட்டமன்றத்தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து அரசியல் வட்டாரத்தில் இந்த…
டெல்லி : ஏப்ரல் 16 அன்று டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடியது. இந்தப்…
சென்னை : நடிகர் சந்தானம் தொடர்ச்சியாகவே ஹீரோவாகவே படங்களில் நடித்து வரும் நிலையில் மீண்டும் காமெடியனாக அவரை பார்க்க மாட்டோமா…