மு.க.ஸ்டாலின் பஞ்சாயத்து தேர்தலுக்கு தான் ஆயத்தமாகிறார்-தம்பிதுரை
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பஞ்சாயத்து தேர்தலுக்கு தான் ஆயத்தமாகிறார் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறுகையில், நாடாளுமன்ற தேர்தலுக்கோ, சட்டமன்ற தேர்தலுக்கோ ஸ்டாலின் ஆயத்தமாகவில்லை. பஞ்சாயத்து தேர்தலுக்கு தான் ஆயத்தமாகிறார். அதிலும் ஸ்டாலினால் வெற்றி பெற இயலாது .மத்திய அரசின் திட்டங்கள் சில திட்டங்கள் தமிழகத்துக்கு பலன் கிடைக்காமல் இருக்கின்றன என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.