கமல் எழுதி ரகுமான் இசையமைத்த ‘வள்ளுவமாலை’ பாடல் : நன்றி தெரிவித்த முதலமைச்சர்!
கமல்ஹாசன் எழுதி ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள வள்ளுவமாலை பாடலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
சென்னை : கன்னியாகுமரில் நிறுவப்பட்டுள்ள 133 அடி கொண்ட திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டு 25ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு வெள்ளிவிழா ஆண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக நேற்று கன்னியாகுமரி வந்தடைந்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
நேற்று, திருவள்ளுவர் சிலை அருகே அமைக்கப்பட்ட கண்ணாடி பாலத்தை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று திருக்குறள் கண்காட்சி அரங்கை திறந்துவைத்து பார்வையிட்டார். அதனை தொடர்ந்து திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா சிறப்பு மலரை வெளியிட்டார்.
அதனை தொடர்ந்து திருக்குறள் மற்றும் கன்னியகுமாரி தொடர்பான முக்கிய 7 அறிவிப்புக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதில், திருவள்ளுவர் வாரம், திருவள்ளுவர் மாநாடு, திருக்குறள் சிறப்பு பயிற்சி, திருவள்ளுவர் சிலைக்கு 3 புதிய படகுகள் ஆகிய அறிவிப்புகள் அடங்கும்.
அதனை தொடர்ந்து தற்போது, வள்ளுவமாலை எனும் வீடியோ பாடலையும் முதலமைச்சர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ‘வள்ளுவமாலை’ பாடலை கமல்ஹாசன் எழுதியுள்ளார் . இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
“தோன்றிய புகழோடு குமரியில் எழுந்தவர்..” என தொடங்கும் இந்த பாடலில் திருக்குறள் மற்றும் திருவள்ளுவரின் சிறப்புகளை தனது புதுமை தமிழில் கமல்ஹாசன் சிறப்பாக எழுதியுள்ளார். அதனை மேம்படுத்த அழகாக இசையமைத்துள்ளார் ஏ.ஆர்.ரகுமான்.
இதனை குறிப்பிட்டு, ” வள்ளுவம் போற்றுதும் வெள்ளி விழாவில் ‘வள்ளுவமாலை’ படைத்திட்ட கலைஞானி கமல்ஹாசன் அவர்களுக்கும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமார் அவர்களுக்கும் நன்றியும் வாழ்த்துகளும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
வள்ளுவம் போற்றுதும் வெள்ளி விழாவில் ‘வள்ளுவமாலை’ படைத்திட்ட கலைஞானி @ikamalhaasan அவர்களுக்கும் இசைப்புயல் @arrahman அவர்களுக்கும் நன்றியும்; வாழ்த்துகளும்!#பேரறிவுச்சிலை #StatueOfWisdom pic.twitter.com/5gA2N8U0BZ
— M.K.Stalin (@mkstalin) December 31, 2024