தமிழக அரசியல் வெற்றியிடத்தை நிரப்பிவிட்டார் மு.க.ஸ்டாலின் – துணை சபாநாயகர்
மக்களின் தேவைகளை சட்டமன்றத்தில் எடுத்துரைத்தால் மட்டுமே ஜனநாயகம் வலுப்பெறும் என துணை சபாநாயகர் பேச்சு.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இரண்டாவது நாளான இன்று நடைபெற்றது. அப்போது, பேசிய துணை சபாநாயகர் பிச்சாண்டி, தமிழக அரசியலில் ஏற்பட்டிருந்த வெற்றியிடத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் நிரப்பிவிட்டார் என்றும் மக்களின் தேவைகளை சட்டமன்றத்தில் எடுத்துரைத்தால் மட்டுமே ஜனநாயகம் வலுப்பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.
கட்சி பாகுபாடியின்றி அனைவரும் பேச சட்டப்பேரவையில் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் சட்டத்தை மதித்து நாகரிகமான சபாநாயகராக நடந்து கொள்வேன் என சபாநாயகர் அப்பாவு உறுதி அளித்துள்ளார். எனக்கு வானளாவிய அதிகாரம் இல்லை, பேரவைக்கு தான் அதிகாரமே தவிர தனிப்பட்ட நபருக்கு அல்ல என்றும் குறிப்பிட்டார்.
இதனைத்தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் புதிதாக பதவியேற்ற சபாநாயகர், துணை சபாநாயகருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து பேசினர். இதன்பின், தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் அப்பாவு ஒத்திவைத்தார். கடந்த 2 நாள் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் புதிய எம்எல்ஏக்கள், சபாநாயகர், துணை சபாநாயகர் பதவியேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.