MK Stalin: டெல்டா குறுவை பாதிப்பு – முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை!

Tamilnadu CM MK Stalin - DMK Meeting

டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிப்பு குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். குறுவை பயிர் சேதம் மற்றும் நிவாரணம் வழங்குவது தொடர்பாக அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் மற்றும் வேளாண்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார்.

போதிய நீர் கடைமடை வரை செல்லாததால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறிய நிலையில், இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி, மாவட்ட வாரியாக ஆய்வு செய்த அதிகாரிகளுடன் சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

தமிழ்நாட்டில் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டது. போதிய நீர் கடைமடை வரை சென்றடையாததால் குறுவை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறியிருந்தனர். விவசாயிகள் கூறியிருந்த நிலையில், வேளாண் துறை அதிகாரிகள் நேரில் கள ஆய்வு மேற்கொண்டனர். இந்த நிலையில், குறுவை சாகுபடி பாதிப்பு குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்