அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து.!
அமேரிக்கா அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸிற்கு மு.க.ஸ்டாலின் அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் அதிபர் தேர்தலானது கடந்த 3-ஆம் தேதி நடைபெற்றது . அதில் குடியரசு கட்சியின் வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் ஆகியோர் போட்டியிட்டனர் . இந்த தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியானதை அடுத்து ஜோ பைடன் 284 சபை ஓட்டுகளை பெற்று அமெரிக்காவின் 46-வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்காவின் வரலாற்றிலையே 70 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளார் ஜோ பைடன் . மேலும் துணை அதிபராக இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரிஸ் தேர்வாகியுள்ளார் .
இருவருக்கும் பல அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் திமுக கட்சியின் தலைவரான மு.க.ஸ்டாலின் அவர்களும் டுவிட்டர் வாயிலாக தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் மற்றும் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹாரிஸிற்கு வாழ்த்துக்கள் என்றும், வரலாற்றில் முதல் முறையாக தேர்தலில் அமெரிக்க மக்கள்
தமிழ் பாரம்பரியம் கொண்ட ஒரு பெண்ணை தமது அடுத்த துணை அதிபராக தேர்வு செய்தது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Congratulations to the President-Elect @JoeBiden and the Vice President-Elect @KamalaHarris of the USA.
Especially pleased that American people has chosen a woman with Tamil heritage as their next Vice-President in this historic election. #USPresidentialElections2020
— M.K.Stalin (@mkstalin) November 7, 2020