மூத்த தலைவர்களிடம் நேரில் வாழ்த்து பெற்ற மு.க ஸ்டாலின்..!
நாளை முதல்வராக பொறுப்பேற்க உள்ள நிலையில் மு.க ஸ்டாலின் மூத்த தலைவர்களிடம் வாழ்த்து பெற்றார்.
தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. இதனால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பெறுப்பேற்கவுள்ளார். நேற்று காலை 133 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்துடன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை மு.க ஸ்டாலின் சந்தித்து முதல்வர் பதவிக்கான உரிமையை கோரினார்.
இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் மு.க ஸ்டாலின் ஆட்சி அமைக்க ஆளுநர் முறைப்படி அழைப்பு விடுத்தார். ஸ்டாலின் இல்லத்தில் ஆளுநரின் செயலாளர் ஆனந்தராவ் படேல் இதை தெரிவித்தார்.
இதனால், நாளை காலை 9 மணிக்கு தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்கயுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் மு.க.ஸ்டாலின் பதவியேற்கவுள்ளனர். ஆளுநர் மாளிகையில் ஸ்டாலினுக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். எளிய முறையில் நடக்கும் பதவியேற்பு நடைபெறயுள்ளது.
இந்நிலையில், நாளை முதல்வராக பொறுப்பேற்க உள்ள நிலையில் மு.க ஸ்டாலின் மூத்த தலைவர்களிடம் வாழ்த்து பெற்று வருகிறார். அதன்படி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் சங்கரய்யாவிடம் மு.க ஸ்டாலின் வாழ்த்து பெற்றார். சென்னை குரோம்பேட்டையில் உள்ள சங்கரய்யா இல்லத்தில் நேரில் சென்று மு.கஸ்டாலின் வாழ்த்து பெற்றார்.
இதைத்தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவை சந்தித்த வாழ்த்து பெற்றார். பின்னர் எம்ஜிஆர் கழகத் தலைவர் ஆர்.எம் வீரப்பனை சந்தித்தும் ஸ்டாலின் வாழ்த்து பெற்றார்.