ஸ்டெர்லைட் படுகொலைகளுக்கு காரணமான அதிமுக – பாஜக கூட்டணிக்கு பாடம் புகட்ட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது பேசிய அவர், தான் 50 ஆண்டுகளாக அரசியலில் ஈடுபட்டு, மக்களுக்கு பல்வேறு பணிகளை ஆற்றிக்கொண்டிருப்பதாகவும், கொளத்தூர் தொகுதிக்கு மட்டுமின்றி, தமிழகத்திற்கே நான் வேட்பாளர் என கூறினார்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மக்கள் மறக்க முடியுமா? தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய 13 பேர் குருவிகளை போல சுட்டுக்கொல்லப்பட்டதை இன்று நினைத்தாலும் நெஞ்சு துடிக்கிறது, இரத்தக் கண்ணீர் வருகிறது என கூறிய ஸ்டாலின் அந்தப் படுகொலைகளுக்கு காரணமான அதிமுக – பாஜக கூட்டணிக்கு பாடம் புகட்ட வேண்டும். பலியானோர் குடும்பத்தினருக்கு தகுதியில்லாத வேலையை கொடுத்தனர் என தெரிவித்தார்.
அதிமுக ஆட்சியில் இருந்த 10 ஆண்டுகளாக எதுவும் செய்யாமல், தேர்தல் நேரத்தில் பல இடங்களில் அடிக்கல் நாட்டுகின்றனர். நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும். இடஒதுக்கீடு 40 சதவீதமாக உயர்த்தப்படும். கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என்றும், தேர்தல் முடிவு வெளியாகி நாங்கள் பதவியேற்றதும் ஜூன் 3-ம் தேதி கலைஞர் பிறந்தநாளன்று கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…