நாடாளுமன்றத்தில் நீட் பிரச்சனைக்கு தீர்வு..!நீட் விலக்கு ஒப்புதல்..! மு.க ஸ்டாலின் அறிக்கை

Published by
kavitha

நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்து கொண்ட இரு மாணவிகளுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மருத்துவப் படிப்பிற்கு நீட் தேர்வு முறை அண்மையில் கொண்டு வரப்பட்டது.இந்தியா முழுவதும் உலா மாணவர்கள் இந்த தேர்வினை கடும் கட்டுபாடுகளுடன் எழுதினர்.நேற்று இந்த தேர்விற்கான முடிவுகள் வெளியாகியது.
நீட் தேர்வு மருத்துவ படிப்பிற்கு பதிலாக மரணத்தையே மாணவர்களுக்கு கொடுத்து வருகிறது.திருப்பூரை சேர்ந்த ரிதுஸ்ரீ என்ற மாணவி நீட் தேர்வில் தோல்வியடைந்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
Related image
இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்த நிலையில் நீட் தேர்வில் தோல்வியடைந்தால் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த வைஷியா என்ற மாணவி தனது வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த வைஷியா என்ற மாணவி தனது வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் இரங்கல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில்  நீட் தேர்வு பிரச்சினைக்கு வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே திமுக எம்.பி-க்கள் தீர்வு காண்பார்கள்.நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்து கொண்ட மாணவிகளுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் நீட் பிரச்னையை நாடாளுமன்றத்தில் ஆணித்தரமாக எழுப்பி உரிய தீர்வு காண திமுக முயற்சிக்கும் அதுமட்டுமல்லாமல் எதிர்வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் திமுக எம்.பி.க்கள்  நீட் பிரச்னையை எழுப்புவார்கள்
நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் பெற அதிமுக அரசு இதுவரை எந்த தொடர் நடவடிக்கையும் எடுக்கவில்லைமேலும் நீட் விலக்கு மசோதாவுக்கு மத்திய பாஜக அரசு உடனடியாக ஒப்புதல் பெற்று தர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
 

Recent Posts

உ.பி-யில் பரபரப்பு…சர்வே செய்ய சென்ற அதிகாரிகள் போலீஸ் மீது தாக்குதல்!

உத்திரபிரதேசம் : மாநிலத்தில் சம்பல் என்ற ஷாஹி ஜமா மசூதி  ஒன்று இருக்கிறது. ஆனால், இந்த மசூதி இங்கு இருப்பதற்கு முன்னதாக…

25 minutes ago

“அவர் தயிரியமாக முடிவெடுப்பவர்…” ஜானகி நூற்றாண்டு விழாவில் ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : தமிழகத்தின் முதல் பெண் முதல்வரும், எம்ஜிஆரின் மனைவியுமான மறைந்த ஜானகியின் நூற்றாண்டு விழா அதிமுக சார்பில் வானகரத்தில்…

37 minutes ago

பொங்கல் அன்று தேர்வு..”எத்தனை முறை சொன்னாலும் திருந்தப்போவதில்லை”..சு.வெங்கடேசன் கண்டனம்!

சென்னை : அடுத்த ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் திருநாள் அன்று  சிஏ பவுண்டேஷன் தேர்வுகள் நடத்தப்படும் என மத்திய…

60 minutes ago

ஆஸி மண்ணில் இந்திய சிங்கத்தின் சம்பவம்! சதம் விளாசி சாதனை படைத்த ஜெய்ஷ்வால்!

பெர்த் : இந்திய அணியில் சம்பவம் செய்வதற்கு  நான் இருக்கிறேன் என்கிற வகையில், இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக…

2 hours ago

விசாரணைக்கு அழைத்து செல்லும் வழியில் இளைஞர் உயிரிழப்பு? காவல்நிலைய மரணமாக வழக்கு பதிவு!

புதுக்கோட்டை : நகர்ப்புறத்தில் அதிகரித்து வரும் போதைப் பழக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக புதுக்கோட்டையில் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில்…

2 hours ago

வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு மிக கனமழை வாய்ப்பு!

சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நேற்று…

2 hours ago