அணைகள் பாதுகாப்பு மசோதாவிற்கு எதிராக திமுக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம்!

மத்திய அரசானது அணைகளை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவர அணைகள் பாதுகாப்பு மசோதாவை கொண்டு வந்துள்ளது. இதற்கு எதிராக திமுக இன்று சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளது. அந்த தீர்மானத்தில், ‘ அணைகள் மாநில அரசு கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும். அதனை மத்திய அரசு தன்வசப்படுத்தும் பார்க்கிறது அணைகளை பாதுகாக்க மத்திய அரசு மாநில அரசுக்கு தேவையான நிதியை கொடுத்தாலே போதுமானது. மாநில சட்ட மன்றங்களின் தீர்மானங்களை மதிக்காமல் மத்திய அரசு நடந்து வருகிறது. ஆதலால் தமிழக அரசு இந்த தீர்மானத்தை எதிர்க்க வேண்டும்.’ என திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ‘ இந்த விவகாரம் குறித்து நாங்கள் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம். இது இந்த மசோதா தமிழகத்திற்கு எதிரானது. அனைத்து மாநிலங்களும் ஒப்புக் கொள்ளும் வரை இந்த மசோதா நிறைவேற்றக் கூடாது எனவும் மத்திய அரசுக்கு கடிதம் மூலம் தெரிவித்து உள்ளோம். தமிழகத்திற்கு சொந்தமான 4 அணைகள் வெளி மாநிலங்களில் உள்ள போதும் அந்த அணை கட்டுப்பாடுகள் தமிழகத்திடமே மட்டுமே உள்ளது தமிழகத்திடம் உள்ளது. அதிமுகவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த அணை பாதுகாப்பு மசோதாவுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். அணை பாதுகாப்பு மசோதா திரும்ப பெறுவதற்கு மத்திய அரசுக்கு மாநில அரசு தொடர்ந்து வலியுறுத்தி வரும். என பதில் தேரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : கோடை கனமழை முதல்…தர்மேந்திர பிரதான் விவகாரம் வரை!
March 12, 2025
நதிகள், வடிகால்கள் அருகே வாழ்வோருக்கு புற்றுநோய் எச்சரிக்கை! ICMR -ஆய்வில் வந்த அதிர்ச்சி தகவல்!
March 12, 2025
அந்த பதவியே வேணாம் டா சாமி! நிராகரித்த கே.எல்.ராகுல்? டெல்லி அணியின் புது கேப்டன் யார் தெரியுமா?
March 12, 2025