பட்ஜெட் கூட்டத்தொடர்: வெளிநாட்டில் இருந்து காணொளி வாயிலாக முதல்வர் மு.க ஸ்டாலின் ஆலோசனை

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் விரைவில் தொடங்க உள்ள நிலையில் ஸ்பெயினில் இருந்து காணொலி வாயிலாக அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 12ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கவுள்ளது. இதை தொடர்ந்து, வரும் 19ம் தேதியன்று தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

இந்த நிலையில் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அவர் தற்போது ஸ்பெயின் நாட்டில் உள்ள நிலையில் அங்கிருந்து காணொளி வாயிலாக ஆலோசித்தார். குறிப்பாக, தமிழக பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்களை தனது ‘X’ பக்கத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது – ராமதாஸ்.!

அந்த பதிவில், “வரும் 12ஆம் தேதி தொடங்கவுள்ள சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஆளுநர் உரையின் வரைவில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்தும், 19-ஆம் நாள் தாக்கல் செய்யப்படவுள்ள நிதிநிலை அறிக்கை குறித்தும் நிதித்துறை முதன்மைச் செயலாளர், வளர்ச்சித்துறை ஆணையர் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் ஸ்பெய்னில் இருந்து காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டு அறிவுரைகளை வழங்கினேன்” என குறிப்பிட்டுள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்