“குடிநீரில் கழிவுநீர் கலப்பது என்பது உறையூரில் இல்லை”- அமைச்சர் கே.என் நேரு விளக்கம்!
பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என திருச்சி சம்பவத்திற்கு அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை : அமைச்சர் கே.என். நேருவின் தொகுதிக்கு உட்பட்ட திருச்சி 10-வது வார்டு பகுதியில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த குழந்தை உட்பட 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதைப்போல, இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, 53 பேர் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக காலையில் இருந்தே தகவல்கள் பரவிக்கொண்டு இருக்கிறது.
இதற்கு காரணம் மாசடைந்த குடிநீரால் தான் ஏற்பட்டது எனவும் செய்திகள் வெளியான நிலையில் அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் அளித்துள்ளார். அமைச்சர் கே.என்.நேரு சட்டப்பேரவையில் திருச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 53 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் ” திருச்சியில் மாசடைந்த குடிநீரால் 3 பேர் உயிரிழப்பு என்பது ஆதாரமற்ற பொய் செய்தி. அவர்களுக்கு மாசடைந்த குடிநீரால் இந்த பிரச்சினை ஏற்படவில்லை. குடிநீர் குழாய்கள் மூலம் வழங்கப்படும் தண்ணீர் சுகாதாரமாக உள்ளது ஆய்வில் உறுதியாகியுள்ளது. ஏனென்றால், குழாய் மூலம் குடிநீர் வழங்குவது நிறுத்தப்பட்டு லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
அதைப்போல, கோயில் திருவிழாவில் கொடுக்கப்பட்ட குளிர்பானம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. உறையூரில் குடிநீரில் கழிவு நீர் கலந்தது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த நிலையில் அமைச்சர் கே.என்.நேரு இந்த விவாகரத்துக்கு விளக்கம் அளித்து பேசினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
‘அந்த இடத்திற்கு செல்லாததால் தப்பிய தமிழர்கள் 68 பேர்’ – சுற்றுலா சென்ற மதுரை நபர் சொன்ன தகவல்.!
April 23, 2025
பயங்கரவாத தாக்குதலில் தமிழர் சந்துரு சிக்கினாரா.? நடந்தது என்ன? மனைவி கொடுத்த விளக்கம்.!
April 23, 2025