பேருந்து வசதி இல்லை என்று கூறிய பெண்ணுக்கு உடனைடியாக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு போன் செய்து அசத்தியுள்ளார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.
நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் வருகின்ற 21 -ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.விக்கிரவாண்டியில் முத்தமிழ்செல்வன் , நாங்குநேரியில் ரெட்டியார்பட்டி நாராயணன் ஆகியோர் அதிமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.இவர்களுக்கு வாக்கு சேகரிக்கும் விதமாக அமைச்சர்கள் செங்கோட்டையன்,செல்லூர் ராஜு,ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் வாக்கு சேகரித்து வருகின்றனர்.
அந்த வகையில் நாங்குநேரி தொகுதியில் தெற்கு காடுவெட்டி பகுதியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்பொழுது முதல்வன் படத்தில் வரும் காட்சிபோல புகார் அளித்த பெண் ஒருவருக்கு சம்பத்தப்பட்ட அமைச்சரிடம் உடனடியாக பேச வைத்துள்ளார். அதவாது அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் பெண்மணி ஒருவர் பேருந்து வசதி இல்லை என புகார் அளித்துள்ளார்.இதற்கு உடனடியாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் பேசியுள்ளார்.மேற்கொண்டு புகார் அளித்த பெண்மணியையும் பேசவைத்து அசத்தியுள்ளார்.இதற்கு பதில் அளித்த அமைச்சர் விஜயபாஸ்கர் பிரச்சினையை சரி செய்வதாக தெரிவித்தார்.பின்னர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் பிரச்சினை சரியாகிவிடும் என்று தெரிவித்தார்.இதனால் அந்த ஊர் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…