ரூ76,000 மதிப்புள்ள செருப்பு, ஷூக்களை காணவில்லை… சென்னை போலீசில் தொழிலதிபர் தந்த விசித்திர புகார்!

Default Image

பொதுவாக காவல் நிலையத்தில், தங்க நகைகள் காணவில்லை, பணத்தை காணவில்லை, வீட்டிலுள்ள விலைமதிப்பான பொருளை காணவில்லை என தான் புகாரளிப்பார்கள். ஆனால், இங்கு ஒருவர் விசித்திரமாக தனது செருப்பை காணவில்லை என கூறியுள்ளார்.
அப்துல் ஹாசிப் என்பவர் கீழ்பாக்கம் திவான் பகதூர் சண்முகம் சாலையில் வசித்து வருகிறார். இரண்டடுக்கு மாடிகளை கொண்டது இவரது இவர் வீடு. இவர் தொழிலதிபராக உள்ளார். இந்நிலையில், இவர் வீட்டில் வைத்திருந்த 76,000 ருபாய் மதிப்புள்ள 10 ஜோடி செருப்புகள் இரவோடு இரவாக காணவில்லை என காவல் நிலையத்தில் புகைரளித்துள்ளார்.
அதுவும், காலை 9.30 மணி வரைக்கும் அந்த ஷூக்கள் மற்றும் செருப்புகள் இருந்ததாம். ஆனால், 10.30  பார்த்த போது அவைகளை காணவில்லை என கூறியுள்ளார். அதுவும் அந்த செருப்புகள் மதிப்பு 76 ஆயிரம் என புகாரில் தெரிவித்துள்ளார்.  தனது அண்டை வீட்டிலுள்ள இளஞ்சர்கள் மீதும், தனது வீடு வேலைக்கார்கள் மீதும் தனக்கு சந்தேகம் உள்ளதாக காவல் நிலையத்தில் புகைரளித்துள்ளார். இந்த வித்தியாசமான புகாரை சிசிடிவி காட்சிகள் மூலம் கண்டறிய போலீசார் ஆய்வு செய்து  வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்