பொங்கல் தொகுப்போடு பரிசு பணத்தை காணவில்லை – எடப்பாடி பழனிசாமி

Default Image

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்போடு பரிசு பணமும் வழங்கப்பட வேண்டும் என ஈபிஸ் ட்வீட்.

தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், வருகிற 2022-ம் ஆண்டு தைப் பொங்கலுக்கு அரிசி குடும்ப (ரேசன்) அட்டைதாரர்களுக்கும்,  இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களுக்கும் பச்சரிசி, முந்திரி திராட்சை உள்ளிட்ட 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்க முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

முதலில் அறிவிக்கப்பட்ட பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்கப்படும் என அறிவிக்கவில்லை. அதன் இதுகுறித்து விளக்கமளித்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, பொங்கல்  பண்டிகைக்கு அறிவிக்கப்பட்ட தொகுப்பில் முழு கரும்பு இடம்பெற முதலமைச்சர் ஆணை பிறப்பித்துள்ளார். அதன்படி 20 பொருட்கள் அடங்கிய துணிப்பையுடன் முழுக்கரும்பும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பொங்கல் விழாவினை மக்கள் சிறப்பாக கொண்டாடும் நோக்கோடு கடந்த அம்மா அரசின் ஆட்சியில் பொங்கலுக்கு தேவையான அனைத்து பொருட்களும் அடங்கிய தொகுப்போடு பொங்கல் பரிசு பணமும்,முழு கரும்பும் வழங்கி வந்தோம். ஆனால் திமுக அரசு முதலில் அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்பில் பணம்,கரும்பை காணவில்லை.

தற்போது அறிவித்திருக்கும் பொங்கல் தொகுப்பில் கரும்பு சேர்க்கப்பட்டு,தொகுப்போடு வழங்கப்பட்டு வந்த பொங்கல் பரிசு பணத்தை காணவில்லை, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்போடு பரிசு பணமும் வழங்கப்பட வேண்டும் என இந்த விடியா திமுக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்