மிஸ் பண்ணிடாதீங்க., வருமான வரித்துறையில் வேலை.,10வது பாஸ் பண்ணா மட்டும் போதும்.!
விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் (sports quota) காலியிடங்கள் நிரப்பப்படும் என்று வருமான வரித்துறை முதன்மை தலைமை ஆணையர் அறிவித்துள்ளார்.
சென்னை வருமான வரித்துறை முதன்மை தலைமை ஆணையர் அலுவலகத்தால் கலியாகவுள்ள பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில், Multi-Tasking Staff (MTS), வருமான வரி ஆய்வாளர் (Inspector of Income Tax) மற்றும் வரி உதவியாளர் (Tax Assistant) போன்ற பதிவுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் (sports quota) காலியிடங்கள் நிரப்பப்படும் என்றும் கூறியுள்ளனர். எனவே, விளையாட்டு வீரர்கள், இந்திய பல்கலைக்கழகங்களின் சங்கத்தின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட, நாடு, மாநிலம், அகில இந்திய இடை பல்கலைக்கழக போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும். மேலும் தேசிய பள்ளி விளையாட்டு, தேசிய உடல் திறன் கொண்டவர்களிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருமான வரித் துறை காலியிட விவரங்கள்:
- எம்.டி.எஸ் – 10
- வருமான வரி ஆய்வாளர் – 12
- வரி உதவியாளர் – 16
கல்வி தகுதி:
- எம்.டி.எஸ் பதவி – அங்கீகரிக்கப்பட்ட குழுவில் இருந்து விண்ணப்பதாரர்கள் 10 வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- வருமான வரி ஆய்வாளர், வரி உதவியாளர்கள் பதவி – அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் அல்லது அதற்கு சமமானதாக பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு:
குறைந்தபட்ச 18 வயது முதல் அதிகபட்ச 25 வயது வரை இருக்க வேண்டும்.
சம்பளம் விவரம்:
எம்.டி.எஸ் – ரூ.5,200 முதல் ரூ.20,200 + கிரேடு பே ரூ.1800 (பிபி -1)
வருமான வரி ஆய்வாளர் – ரூ.9,300 முதல் ரூ.34,800 + கிரேடு பே ரூ.4,600 (பிபி -2)
வரி உதவியாளர்கள் – ரூ.5200 முதல் ரூ.20,200 + கிரேடு பே ரூ.2,400 (பிபி-எல்)
விண்ணப்பிக்கும் கடைசி தேதி:
ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது. ஆன்லைன் பதிவுக்கான கடைசி தேதி ஜனவரி 17, 2021 ஆகும்.
தேர்வு நடைமுறை:
- இரண்டு கட்டங்களாக அடிப்படை தேர்வு செய்யப்படும்.
- தகுதியானவர்கள் விண்ணப்பித்த பதவியின் விருப்பத்திற்கு ஏற்ப, அவர்களின் தற்போதைய உடல்தகுதி மற்றும் விளையாட்டுகளில் சாதனை ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
- பட்டியலிடப்பட்ட தேர்வர்கள் சென்னையில் நடைபெறும் கள சோதனைகளுக்கு (தங்கள் சொந்த செலவில்) ஆஜராக வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் தமிழ்நாடு வருமான வருமானவரித்துறையின் –https://www.tnincometax.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைனில் 17 ஜனவரி 2021 அன்று அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்கலாம்.