திருச்சி மாவட்டம் லால்குடியில் தண்டவாளத்தில் லாரி டயர்கள் வைத்த மர்ம நபர்கள். காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மேலவாளாடி பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் கடந்த ஜூன் 1ஆம் இரவு லாரி டயர்கள் சில மர்ம நபர்களால் அங்கே வைக்கப்பட்டுளள்ன. அப்போது அந்தவழியாக வந்த கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் மோதி சில பெட்டிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு ரயில் 40 நிமிடங்கள் தாமதமாக சென்றது.
இத சம்பவத்தில் ரயில் ஓட்டுநர் லாவகமாக செயல்பட்டு ரயில் வேகத்தை குறைத்த காரணத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனை அடுத்து தற்போது மீண்டும் அதே இடத்தில் காவல்துறையினர் தங்கள் விசாரணையை துவங்கி உள்ளனர்.
ஏற்கனவே. மேலவாளடி பகுதியில் செல்போன் டவர்களை ஆய்வு செய்து சம்பவத்தன்று பதிவாகி இருந்த செல்போன் எண்களை கண்டறிந்து 10 நபர்களிடம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். மேலும், மோப்ப நாய்கள் உதவியுடன் காவல்துறை விசாரணையை துவங்கி உள்ளது. இது ரயிலை கவிழ்க்க நடந்த சதியா என்கிற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையை துவங்கி உள்ளனர்.
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…