மாவட்ட செயலாளர் பொறுப்பு.! கட்சி பதவிக்கு மோதிக்கொள்ளும் திமுக அமைச்சர்கள்.!
புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு அமைச்சர் எஸ்.ரகுபதி விருப்ப மனு கொடுத்துள்ளார். அதே போல அமைச்சர் மெய்யநாதன் ஆதரவாளர்கள் விருப்ப மனு கொடுத்துள்ளனர்.
தமிழகத்தில் ஆளும் திமுக கட்சியில் மாவட்ட செயலாளர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. அதில் போட்டியிட பலரும் விருப்ப மனுக்களை கொடுத்து வருகின்றனர்.
இதில் , புதுக்கோட்டை மாவட்ட தெற்கு பகுதி பொறுப்பாளராக கட்சி தலைமையால் நியமிக்கப்பட்ட சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி. தேர்தலில் போட்டியிட்டு புதுக்கோட்டை மாவட்ட தெற்கு பகுதி செயலாளர் பதவிக்கான தேர்தலுக்கு விருப்ப மனுவை நேரில் கொடுத்துள்ளார் .
ஏற்கனவே, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றிய செயலாளராக பதவியில் வகிக்கும் சுற்றுசூழல் அமைச்சர் மெய்யநாதன் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளராக வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் விருப்ப மனு கொடுத்துள்ளனர். இதனால், புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளர் பதவி தேர்தல் சூடுபிடித்துள்ளது.
இதில் விருப்ப மனுக்களை அவரவர் கையெழுத்திட்ட மனுக்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். இதில் அமைச்சர் மெய்யநாதன் கையெழுத்திட்ட விருப்ப மனு தான் கொடுக்கப்பட்டதா என்பது விரைவில் தெரிந்துவிடும்.