அமைச்சர் மைத்துனர் அரசு பணிகளில் தலையீடு.? அதிகாரிகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!
தமிழக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மைத்துனர் கடலூர் நெல் கொள்முதல் அரசு பணிகளில் தலையிடுவதாக கூறி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கடலூர் பகுதியில் நெல் கொள்முதல் நிலையங்களில் தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம அவர்களின் மைத்துனன் தலையீடுவதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.
அமைச்சரின் மைத்துனன் அரசு பணிகளில் தலையிடுகிறார். மேலும், நெல் கொள்முதல் நிலையங்களில் அமைச்சருக்கு வேண்டப்பட்டவர்கள் மட்டுமே இருக்கிறார்கள். என சென்னை உயர்நீதிமன்றத்தில் பட்டுசாமி என்பவர் வழக்கு தாக்கல் செய்து இருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், கடலூர் மாவட்ட எஸ்பி, டி.என்.எஸ்.சி நிர்வாக இயக்குனர், தொழிலாளர் நல ஆணையர் ஆகிய அரசு அதிகாரிகள் இந்த விவகாரத்தில் பதில் அளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளனர்.