கலவரம் நடந்து முடிந்தவுடன் பாஜக ஆட்சி.! சிறுபான்மை ஆணைய தலைவர் கடும் விமர்சனம்.!

Default Image

தமிழ்நாட்டை வன்முறை களமாக மாற்றி, வெறுப்பு அரசியலை புகுத்த தமிழக ஆளுநரும், அண்ணாமலையும் முயற்சிக்கிறார்கள். – தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ்.

இன்று திருநெல்வேலியில் தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘திருநெல்வேலி மாவட்டத்தில் சிறுபான்மையின மாணவர்களுக்கு 7.11 கோடி ரூபாய் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறுபான்மையின மக்களை சந்தித்து, அவர்கள் சந்திக்கும் பிரதான பிரச்னைகளை கண்டறிந்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசித்து சரி செய்து வருகிறோம்.’ என தெரிவித்தார்.

மேலும் கூறுகையில், ‘ சிறுபான்மை மக்களை பயமுறுத்தும் வகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசி வருகிறார். தமிழக அரசுக்கு எதிராக ஆளுநர் செயல்பட்டு வருகிறார். இது பொருளாதாரம் மற்றும் சமூக முன்னேற்றத்தை வெகுவாக பாதிக்கும். என தனது விமர்சனத்தை முன்வைத்தார் .

மேலும் குறிப்பிடுகையில், ‘ தமிழ்நாட்டை வன்முறை களமாக மாற்றி, வெறுப்பு அரசியலை புகுத்த தமிழக ஆளுநரும், அண்ணாமலையும் முயற்சிக்கிறார்கள். இதற்கு பின்னால் ஒன்றிய அரசு இருக்குமோ என்ற எண்ணம் தோன்றுகிறது.’ என தனது விமர்சனத்தை முன்வைத்தார் சிறுபான்மையின நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ்.

மேலும், ‘ இடஒதுக்கீடு என்பது அனைத்து சமூக மக்களுக்கும் கிடைக்கும் வகையில் இருக்க வேண்டும். பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு மத்திய அரசு இட ஒதுக்கீடு அளிப்பது மிகப்பெரிய சமூக அநீதி.’ என தனது காட்டமான கருத்தை கூறினார் பீட்டர் அல்போன்ஸ்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்