#BREAKING: பாமகவிடம் பேசிய அமைச்சர்கள் முதல்வருடன் சந்திப்பு..!

Default Image

வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு தொடர்பாக பாமக நிர்வாகிகளுடன் பேசி அமைச்சர்கள், தற்போது முதல்வருடன் சந்தித்து பேசி வருகின்றனர்.

தமிழகத்தில் வன்னியர்களுக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என கூறி பா.ம.க சார்பில் பல போராட்டங்கள் நடைபெற்றது. ஆனால், ஆளும் அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவின் கோரிக்கையை அதிமுக அரசு இதுவரை எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை.

இதற்கிடையில் சமீபத்தில் பாமக நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக தமிழக அரசு குழுவுடன்  3-ஆம் தேதி(அதாவது) பேச்சுவார்த்தை சென்னையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டது.

இந்தப் பேச்சு வார்த்தை முடிவைப் பொறுத்து நிர்வாகக் குழுவை மீண்டும் கூட்டி அரசியல் முடிவை எடுப்பது என்றும் பாமக சார்பில் தெரிவிக்கப்பட்டது.  இந்நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் தங்கமணியின் இல்லத்தில் வன்னியர்களுக்கு 20% உள் இடஒதுக்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் பாமக தலைவர் ஜிகே மணி, ஏகே மூர்த்தி, வழக்கறிஞர் பாலு உட்பட 6 பேர் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு தொடர்பாக பாமக நிர்வாகிகளுடன் பேசி அமைச்சர்கள், தற்போது முதல்வருடன் சந்தித்து பேசி வருகின்றனர். பாமக கோரிக்கை தொடர்பாக அமைச்சர் தங்கமணி, வேலுமணி சி.வி சண்முகம் ஆகியோர் முதல்வரை சந்தித்து பேசி வருகின்றனர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live - 06 03 2025
sunil gavaskar rohit sharma
Actor Abhinay
gold price
Tamilisai Soundararajan Selvaperunthagai
rain update
Chennai high court