செந்தில் பாலாஜியை சந்திக்கும் அமைச்சர்கள்.! அது பாசம் இல்லை.. வேறு காரணம்.! இபிஎஸ் விமர்சனம்.!

edappadi palanisamy

செந்தில் பாலாஜி கைதால் முதலமைச்சர், மற்ற அமைச்சர்கள் பதற்றத்தில் உள்ளனர் என எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.

அமைச்சர் செந்தில்பாலாஜி கைது தொடர்பாக சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறை தன் கடமையை செய்துள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனால், அமைச்சர் செந்தில் பாலாஜி தார்மீக அடிப்படையில் ராஜினாமா செய்ய வேண்டும். செந்தில் பாலாஜி கைதால் முதலமைச்சர், அமைச்சர்கள் பதறி போயுள்ளனர். செந்தில் பாலாஜி கைதுக்கு காரணம் புதிய வழக்கு அல்ல, 4 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு என்றார்.

மனித உரிமை குறித்து பேசுவதற்கு முதலமைச்சர் உள்ளிட்ட திமுகவினருக்கு தகுதி கிடையாது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார். தமிழ்நாடு முதலமைச்சர் ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சும், எதிர்கட்சியாக இருக்கும் போது ஒரு பேச்சும் பேசி வருகிறார்.

ரூ.30 ஆயிரம் கோடி குறித்து அமலாக்கத்துறையிடம் செந்தில் பாலாஜி வாய் திறந்துவிட்டால், தங்களுக்கு ஏதேனும் பிரச்சனை வந்துவிடுமோ என்ற அச்சத்தில் செந்தில் பாலாஜியை ஓடிஓடி போய் பார்த்திருக்கிறார் முதலமைச்சர் என்றும் செந்தில் பாலாஜியை திமுக அமைச்சர்கள் சந்தித்து வருவது பாசம் அல்ல, அது வேறு காரணம் எனவும் விமர்சித்துள்ளார்.

மேலும், தலைமை செயலகத்தில் சோதனை நடத்தியது தமிழகத்திற்கே தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. விசாரணைக்கு ஒத்துழைப்பு தராமல் செந்தில் பாலாஜி நாடகத்தை அரங்கேற்றுகிறார். அமலாக்கத்துறை திட்டமிட்டு கைது செய்ததாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகிறார். செந்தில் பாலாஜி வீட்டிற்கு சென்ற வருமானத்துறை அதிகாரிகளை திமுகவினர் தாக்கினார். அமலாக்கத்துறை முழு ஒத்துழைப்பை அளிப்பதாக நேற்று செந்தில் பாலாஜி தெரிவித்தார் எனவும் இபிஎஸ் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்