தலைமை செயலகத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் நிர்வாகிகளுடன், அமைச்சர்கள் பேச்சுவார்த்தை தொடங்கியது.
அரசு ஊழியர் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் சங்கர பெருமாள் போராட்டம் குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை நீக்கி மத்திய அரசு ஊழியர்களுக்கு சமமான ஊதியம் வழங்குதல், மேலும் ஊதிய முரண்பாட்டை நீக்குதல் மற்றும் அங்கன்வாடி, தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியம் வழங்குதல், 21 மாத நிலுவையிலுள்ள ஊதியத்தை வழங்குதல் மேலும் 5000 பள்ளிகளை மூடும் திட்டத்தைக் கை விட வேண்டும் உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திய டிசம்பர் 4ந்தேதி முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் 106 சங்கங்களைச் சேர்ந்த அனைத்து ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர்.ஆனால் கஜா புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் மட்டும் இந்த வேலை நிறுத்தம் ஒத்திவைக்கப்படும் என தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று பேச்சுவார்த்தை நடத்த ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்தது.
அதன்படி இன்று தலைமை செயலகத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் நிர்வாகிகளுடன், அமைச்சர்கள் பேச்சுவார்த்தை தொடங்கியது.அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், உதயகுமார் மற்றும் நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் சண்முகம் ஐஏஎஸ் உள்ளிட்டோர் அரசு தரப்பில் பங்கேற்றுள்ளனர்.
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…