அமைச்சர்கள் தங்களில் யாருக்கு மூளை குறைவாக உள்ளது என்பதை காட்ட தினமும் போட்டியிடுகின்றனர் – அண்ணாமலை
திமுக ஆட்சியில் உள்ள அமைச்சர்கள் தங்களில் யாருக்கு மூளை குறைவாக உள்ளது என்பதை காட்ட தினமும் போட்டியிடுகின்றனர் என அண்ணாமலைட்வீட்.
சென்னையின் தேனாம்பேட்டையிலுள்ள, டி.எம்.எஸ் வளாகத்தில் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியில், மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு பின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை கட்டுக்குள் வராமல் இருக்கிறது. டெல்லி, ஹரியானா, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், கேரளா போன்ற பல்வேறு மாநிலங்களில் தொற்றின் எண்ணிக்கை கூடுதலாகிக் கொண்டிருக்கின்றது. வடமாநிலங்களிலிருந்து வருகிற மாணவர்கள் இந்த கல்வி நிறுவனங்களுக்கு வருகின்றபோது அவர்களின் மூலம் ஒட்டுமொத்தமாக இந்த தொற்று பரவத் தொடங்கியுள்ளது என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தி.மு.க., ஆட்சியில் உள்ள நம் மாநில அமைச்சர்கள், ‘தங்களில் யாருக்கு மூளை குறைவாக உள்ளது’ என்பதை காட்ட, தினமும் போட்டி போட்டுக் கொள்கின்றனர். அவர்கள் தமிழ் மக்களை தங்கள் முட்டாள்தனத்தால் வீழ்த்துகிறார்கள்!’ என பதிவிட்டுள்ளார்.
Ministers from our state in DMK Govt compete among themselves on a daily basis to show, ‘who has got lesser brains among them’.
Sadly they are letting Tamil people down by their idiocy! https://t.co/74Y9eL0mah
— K.Annamalai (@annamalai_k) June 1, 2022