மீட்புப்பணிகள் குறித்து அமைச்சர்கள், தலைமை செயலாளர் ஆலோசனை..!
கடந்த சில நாட்களாக, சென்னையில் பெய்த கனமழையால் சென்னையின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மழைநீர் சூழ்ந்திருப்பதால், மக்களின் இயல்புவாழ்க்கை பாதிப்புக்குள்ளாகி உள்ளது.
மீட்புப்பணிகள் தொடர்ந்து வரும் நிலையில், பெரும்பாலான பகுதிகளில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. தேங்கிய மழைநீர் இன்னும் வடியாமலே இருக்கிறது. இதனால், லட்சக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் இந்த பகுதிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை
பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும்,மக்களுக்கு செய்து வருகின்றனர். 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், மிக்ஜாம்’ புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்து நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வரும் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்டோர் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டனர்.