டெண்டர்கள் மீது ஆர்வம் காட்டாத ஒப்பந்ததாரர்களுக்கு அமைச்சர்களே போன் செய்து டெண்டர்களை எடுக்க சொல்லி கட்டாயப்படுத்துவதாக தகவல் வந்து கொண்டிருக்கிறது என ஸ்டாலின் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறையில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் தேர்தல் பரப்புரையில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், நான்காண்டு காலத்தில் எத்தனை பேருக்கு வேலை கொடுத்தீர்கள், காலியான அரசு பணியிடங்கள் நிரப்பட்டதா..? பொதுத்துறை நிறுவனங்களில் இருக்கக்கூடிய காலி பணியிடங்களை நிரப்பட்டதா..? தமிழகத்தில் மூடப்பட்ட நிறுவனங்களில் திறக்க என்ன முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
கடந்த தேர்தலில் ஆண்டுக்கு 2 லட்சம் பேருக்கு வேலை வாங்கி தருவதாக அதிமுக அரசு வாக்குறுதி கொடுத்தார்கள். ஆண்டுக்கு எத்தனை பேருக்கு வேலை கொடுத்து உள்ளீர்கள்..? தொழில்முனைவோர் மாநாட்டில் தொடங்கப்பட்ட தொழில்களில் எத்தனை ஆயிரம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது.
இரண்டாவது தொழில் முனைவோர் மாநாடு நடத்தப்பட்டது. அதில் எத்தனை ஆயிரம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது..? தமிழக அரசு பணியாளர்கள் தேர்வு தேர்வாணைய தேர்வுகள் ரத்து செய்ததற்கு என்ன காரணம், தமிழக பணியிடங்களில் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிக அளவு சேர்வதற்கு என்ன காரணம் அது எப்படி சாத்தியமானது என கேள்வி எழுப்பினார்.
முதல்வருக்கு இளைஞர்கள் மீது அக்கறை இருந்திருந்தால் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி இருப்பார், இதை செய்ய மாட்டார் என்றால் அவருக்கு செய்ய தெரியாது. வீட்டிலிருந்தே புகார் அளிக்கலாம் என முதல்வர் கூறுகிறார், ஆனால் அது நிவர்த்தி செய்யப்படுமா..? தேர்தல் நடக்கும் 6 மாதத்திற்கு முன்னதாகவே பெரிய அளவில் டெண்டர்கள் விட மாட்டார்கள். ஏனென்றால் ஆட்சி முடிவதற்குள் அவற்றை செய்ய முடியாது என்பதால் டெண்டர் தவிர்க்கப்படும்.
ஆனால் தற்போது பணிகள் முடிக்க முடியாது என்று தெரிந்தும் அவசர அவசரமாக டெண்டர் விடப்படுகிறது. அதிமுக ஆட்சியில் டெண்டர் கொள்ளை நடந்து கொண்டே இருக்கிறது. இந்த டெண்டர்கள் மீது ஆர்வம் காட்டாத ஒப்பந்ததாரர்களுக்கு அமைச்சர்களே நேரடியாக போன் செய்து டெண்டர்களை எடுத்துக்கொள்ளச் சொல்லி கட்டாயப்படுத்துவதாக தகவல் வந்து கொண்டிருக்கிறது என அவர் தெரிவித்தார்.
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…