கஜா புயல் நிவாரண பணிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு அமைச்சர்கள் களப்பணியாற்றினர்…!அமைச்சர் செல்லூர் ராஜூ
திமுக கூட்டணியில் எத்தனை கட்சிகள் இருந்தாலும் கவலையில்லை என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில், கஜா புயல் நிவாரண பணிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு அமைச்சர்கள் களப்பணியாற்றினர். அதைப்போலவே நிவாரணமும் கொடுக்கப்பட்டுள்ளது.மத்திய அரசு கொடுத்துள்ளது இடைக்கால நிவாரணமே, மத்திய குழுவின் அறிக்கை சென்றடைந்த பின்புதான் முழுத்தொகையும் நமக்கு கிடைக்கும்.திமுக கூட்டணியில் எத்தனை கட்சிகள் இருந்தாலும் கவலையில்லை. நாங்கள் மக்களை நம்பித்தான் அரசியலில் இருக்கிறோம்.ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, டிசம்பர் 5-ஆம் தேதி மதுரையில் அமைதி பேரணி நடைபெறும் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.