இவர்களை பொத்தி பாதுக்காக்க வேண்டும் – அமைச்சர் விஜயபாஸ்கர்.!

Default Image

சர்க்கரை நோய் ரத்தக் கொதிப்பு உள்ளவர்களை பொத்தி பாதுகாத்து கொள்ள வேண்டும் என விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இன்று 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த எண்ணிக்கை 17082 ஆகவும், உயிரிழப்பு 118 ஆகவும் அதிகரித்துள்ளது எனசுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் இதுவரை 4,21, 480 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் 41 அரசு மற்றும் 27 தனியார் ஆய்வகங்கள் என மொத்தம் 68 ஆய்வகங்கள் உள்ளது என விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 88 சதவீத பேருக்கு எந்த அறிகுறியும் இல்லை என தெரிவித்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 12 சதவீதம் பேருக்கு மட்டுமே அறிகுறி உள்ளது. 40% காய்ச்சல், 37% இருமல்,  10% தொண்டை வலி அறிகுறியுடன் இருப்பது  கடந்த மூன்று மாதங்களில் கொரோனா பாதிப்பு குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

 சர்க்கரை நோய் ரத்தக் கொதிப்பு உள்ளவர்களை பொத்தி பாதுகாத்து கொள்ள வேண்டும், சரியான நேரத்தில் மருந்துகளை உட்கொள்ள வேண்டும். அவர்களுக்கு தேவையான மருந்துகளை சரியாக அளித்து மருத்துவர்கள் சொல்லும் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும். கொரோனாவால்  உயிரிழந்தவர்களில் 86% பேர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்களே இறந்துள்ளனர். 60 வயதிற்கு மேற்பட்டவர்களில் 50 சதவீத பேர் உயிரிழந்துள்ளனர்  என விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்