தமிழக அரசின் மக்கள் நல்வழ்வுத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் அவர்களின் வீட்டில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த வருமான வரித்துறையினரின் சோதனையின் அடிப்படையில் புதிய முடிவுகளை எடுக்க வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது. இதில், கடந்த 2011மற்றும்2012 நிதி ஆண்டிலிருந்து 2018மற்றும் 2019ம் நிதி ஆண்டு வரை தாக்கல் செய்த வருமான வரி கணக்குகளை மீண்டும் மதிப்பீடு செய்யும் அதிரடி நடைமுறைகளை வருமான வரித்துறை தற்போது, மேற்கொண்டு வருகிறது. மேலும், குட்கா முறைகேடு மற்றும் சேகர் ரெட்டியுடனான அமைச்சரின் தொடர்பு உள்ளிட்ட வழக்குகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.
அதில் தொழிலதிபர் சேகர் ரெட்டி நடத்திவரும் மணல் குவாரியில் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு இவரது மணல் குவாரியில் 20% பங்கு இருந்துள்ளது என்றும், இதில் அவர் , சுமார் 200 கோடி ரூபாய் வரையில் வரி ஏய்ப்பு செய்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. மேலும், குட்கா முறைகேடு மற்றும் சேகர் ரெட்டியுடன் தொடர்பு குறித்து இறுதி அறிக்கையில் இந்த குற்றச்சாட்டுகள் சேர்க்கப்படும் என்று வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த வழக்கு விசாரணை இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது.எனவே கூடிய விரைவில்,அமைச்சர் விஜயபாஸ்கர் வரிஏய்ப்பு செய்தது எவ்வளவு என்று வருமானவரித்துறை விரைவில் அறிக்கை வெளியிடும் என்று தெரிகிறது. இதனால், மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.இந்த தகவல் தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கையில், ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…