வருமான வரித்துறையின் வட்டத்திற்குள் சிக்கும் அமைச்சர்.. மணல் குவாரி மூலம் 200 கோடி வரி ஏய்ப்பு என சலசலப்பு..

Default Image
  • வருமான வரித்துறையின் பிடியில் சிக்கப்போகும் அமைச்சர் விஜயபாஸ்கர்.
  • சேகர் ரெட்டி மற்றும் குட்கா விவகாரத்தில் அமைச்சரை நெருங்கும் வருமான வரித்துறை.

தமிழக அரசின்  மக்கள் நல்வழ்வுத்துறை அமைச்சராக இருந்த  விஜயபாஸ்கர் அவர்களின் வீட்டில் கடந்த  2017ம் ஆண்டு  ஏப்ரல் மாதம்  நடந்த வருமான வரித்துறையினரின்  சோதனையின் அடிப்படையில் புதிய முடிவுகளை எடுக்க வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது. இதில், கடந்த  2011மற்றும்2012  நிதி ஆண்டிலிருந்து 2018மற்றும் 2019ம் நிதி ஆண்டு வரை தாக்கல் செய்த வருமான வரி கணக்குகளை மீண்டும்  மதிப்பீடு செய்யும் அதிரடி நடைமுறைகளை வருமான வரித்துறை தற்போது, மேற்கொண்டு வருகிறது. மேலும், குட்கா முறைகேடு மற்றும் சேகர் ரெட்டியுடனான அமைச்சரின் தொடர்பு உள்ளிட்ட வழக்குகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.

Related image

அதில் தொழிலதிபர்  சேகர் ரெட்டி நடத்திவரும் மணல் குவாரியில் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு இவரது மணல் குவாரியில்  20% பங்கு இருந்துள்ளது என்றும், இதில் அவர் , சுமார் 200 கோடி ரூபாய் வரையில் வரி ஏய்ப்பு செய்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. மேலும், குட்கா முறைகேடு மற்றும்  சேகர் ரெட்டியுடன் தொடர்பு குறித்து இறுதி அறிக்கையில் இந்த குற்றச்சாட்டுகள் சேர்க்கப்படும் என்று வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த  வழக்கு விசாரணை இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது.எனவே கூடிய  விரைவில்,அமைச்சர்  விஜயபாஸ்கர் வரிஏய்ப்பு செய்தது எவ்வளவு என்று வருமானவரித்துறை விரைவில் அறிக்கை வெளியிடும் என்று தெரிகிறது. இதனால், மக்கள்நல்வாழ்வுத்துறை  அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.இந்த தகவல் தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்