இனி மாவட்டந்தோறும் நடமாடும் பல் மருத்துவ குழுக்கள் ஏற்படுத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.இன்று நடைபெற்ற சர்வதேச பல்மருத்துவ அமைப்பின் மாநாடு சென்னை அடுத்த பூந்தமல்லி வேலப்பஞ்சாவடியில் உள்ள சவிதா மருத்துவ கல்வி நிறுவனத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர். விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகம் சுகாதாரத்துறையில் 2030ம் ஆண்டு அடைய வேண்டிய இலக்கை தற்போதே அடைந்து விட்டதாக குறிப்பிட்டார். அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் விஜயபாஸ்கர் புதிதாக உருவாக்கப்பட உள்ள மருத்துவ கல்லூரிகளில் 85 சதவிகித இடத்தை தமிழக மாணவர்கள் பெறுவார்கள் என்றார்.
மேலும் கூறிய அவர், பொதுவாக பல் மருத்துவ படிப்பு என்பது மிகவும் அவசியமான படிப்பாகும்.எனவே பல் மருத்துவ படிப்பை முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கக்கூடிய வகையில் ஏற்கனவே மாவட்ட அளவில் உள்ள பிரிவுகளை மாண்புமிகு முதலமைச்சரின் ஒப்புதலோடு புதிய பல்மருத்துவ இடங்கள் தோற்றுவிக்கப்டும் என்றும், கூடிய விரைவில் மாவட்டந்தோறும் நடமாடும் பல் மருத்துவ குழுக்கள் ஏற்படுத்தப்படும் என்றும், அதற்கான அரசாணையும் கூடிய விரைவில் பிறப்பிக்கப்படும் என தெரிவித்தார். இந்த நடமாடும் மருத்துவக்குழு வந்தால் பொதுமக்களுக்கு பயணுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கின்றனர்.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…