விரைவில் வீடு தேடி பல் மருத்துவ சிகிச்சை…!!! அமைச்சரின் அதிரடி அறிவிப்பு…!!!

Default Image

இனி மாவட்டந்தோறும் நடமாடும் பல் மருத்துவ குழுக்கள் ஏற்படுத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.இன்று நடைபெற்ற  சர்வதேச பல்மருத்துவ அமைப்பின் மாநாடு சென்னை அடுத்த  பூந்தமல்லி வேலப்பஞ்சாவடியில் உள்ள சவிதா மருத்துவ கல்வி நிறுவனத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்  துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர். விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

Related image

இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகம் சுகாதாரத்துறையில் 2030ம் ஆண்டு அடைய வேண்டிய இலக்கை தற்போதே  அடைந்து விட்டதாக குறிப்பிட்டார். அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் விஜயபாஸ்கர் புதிதாக உருவாக்கப்பட உள்ள மருத்துவ கல்லூரிகளில் 85 சதவிகித இடத்தை தமிழக மாணவர்கள் பெறுவார்கள் என்றார்.

 

Image result for vijayabaskar

மேலும் கூறிய அவர், பொதுவாக பல் மருத்துவ படிப்பு என்பது மிகவும் அவசியமான படிப்பாகும்.எனவே  பல் மருத்துவ படிப்பை முடித்தவர்களுக்கு  வேலைவாய்ப்புகள் உருவாக்கக்கூடிய வகையில் ஏற்கனவே மாவட்ட அளவில் உள்ள பிரிவுகளை மாண்புமிகு முதலமைச்சரின் ஒப்புதலோடு புதிய பல்மருத்துவ இடங்கள் தோற்றுவிக்கப்டும் என்றும், கூடிய விரைவில் மாவட்டந்தோறும் நடமாடும் பல் மருத்துவ குழுக்கள் ஏற்படுத்தப்படும் என்றும், அதற்கான அரசாணையும் கூடிய விரைவில் பிறப்பிக்கப்படும் என தெரிவித்தார். இந்த நடமாடும் மருத்துவக்குழு வந்தால் பொதுமக்களுக்கு பயணுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்