மருத்துவ சங்கங்களுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சுவார்த்தை

மருத்துவ சங்கங்களுடன் இரவு 9.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
அரசு மருத்துவர்கள் ஊதிய உயர்வு , மருத்துவர் பணியிடங்களை குறைக்க கூடாது மற்றும் உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 5வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவ சங்கங்களுடன் இரவு 9.30 மணிக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை நடத்துகிறார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.