இந்தியாவுக்கு புகழ் சேர்த்த இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் , இந்தி படங்களில் தான் பணியாற்றுவதற்கு எதிராக ஒரு கூட்டம் செயல்படுவதாக கூறினார்.அவர் இவ்வாறு கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆனால் ரகுமானுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகிறன்றனர்.
இந்நிலையில் ரகுமானுக்கு ஆதரவாக அமைச்சர் வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,பாலிவுட்டில் தனக்கு எதிராக ஒரு தரப்பினர் வதந்தி பரப்பி, நல்ல படங்களும் அதிக வாய்ப்புகளும் கிடைக்காமல் இருப்பதற்கு காரணமாக உள்ளனர் என்று இந்திய மக்களின் இதயம் மட்டுமல்ல உலகளவில் இமயம் தொட்ட நம் தமிழ் மண்ணின் ஆஸ்கர் நாயகன் திரு. ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளது மிகவும் வருத்தமளிக்கிறது.
எல்லைகளில்லா இசையை எல்லைகள் கடந்து இயக்கி இந்தியாவிற்கே புகழ் சேர்த்த நமது இசைப்புயல் திரு. ஏ.ஆர். ரகுமான் அவர்களுக்கு எதிராக செயல்படுபவர்கள் கண்டிக்கத்தக்கவர்கள். அவருக்கு என்னுடைய மனப்பூர்வமான ஆதரவை பதிவு செய்து கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடும் வீரர்கள், சர்வதேச போட்டிகள் விளையாடும் நாட்களை தவிர்த்து இடையில் உள்ளூர் போட்டிகளான…
கோவை : மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையின் ஒரு பகுதியில் இந்து மத கடவுள் முருகன் கோயில், காசி விஸ்வநாதர்…
சென்னை : சென்னையில் நேற்று 1 சவரன் ரூ.680 குறைந்து ரூ.61,640க்கு விற்பனையான நிலையில், இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது.…
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. ஈரோடு கிழக்கு…
சென்னை : சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் பனி மூட்டம் நீடிக்கும் என சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான 5வது மற்றும் இறுதி டி20 போட்டியின் போது, சஞ்சுவுக்கு காயம்…