ரஜினிக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் வேலுமணி.!
“கறுப்பர் கூட்டம்” என்ற யூடியூப் சேனலில் “கந்த சஷ்டி கவசம்” குறித்து அவதூறாகவும் பேசியதாகவும், இந்துக்களின் உணர்வுகளை இது புண்படுத்தியுள்ளதாக புகார் கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்ட 500 வீடீயோக்களைநீக்கம் செய்யப்பட்டுள்ளது.
“கறுப்பர் கூட்டம்” என்ற யூடியூப் சேனலுக்கு எதிர்ப்பாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில், நேற்று நடிகர் ரஜினிகாந்த் தனது “டுவிட்டர்” பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
கந்த சஷ்டி கவசத்தை மிகக் கேவலமாக அவதூறு செய்து, பல கோடி தமிழ் மக்களின் மனதை புண்படுத்தி கொந்தளிக்கச் செய்த, இந்த ஈனச்செயலை வாழ்க்கையில் மறக்க முடியாதபடி செய்தவர்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட வீடியோக்களை அரசு தலையிட்டு நீக்கியதற்காக தமிழக அரசுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள். இனிமேலாவது மதத் துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும். ஒழியணும்.
எல்லா மதமும் சம்மதமே… கந்தனுக்கு அரோகரா… என பதிவிட்டு இருந்தார். இந்நிலையில், அமைச்சர் எஸ்.பிவேலுமணி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட பதிவில், உடனடியாக நடவடிக்கை எடுத்தமைக்கு பாராட்டு தெரிவித்து பாகுபாடு இல்லா சமய நல்லிணக்கத்திற்கு குரல் கொடுத்துள்ள ரஜினிக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.