கரூர் மாவட்டத்தை சேர்ந்த அபிநயாவை பாராட்டிய அமைச்சர் வேலுமணி.
கரூர் மாவட்டம் முன்னூர் கிராமத்தை சேர்ந்த சதாசிவம் – சிவகாமி தம்பதிகளின் மகளான அபிநயா, அரசு பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்தார். இதனை அடுத்து கோயம்புத்தூர் அரசு வேளாண்மை கல்லூரியில் இளநிலை விவசாயம் பயின்றார்.
இதனை தொடர்ந்து, அபிநயா டி.என்.பி.எஸ்.சி தேர்வில் வெற்றி பெற்று ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வேளாண்மை அலுவலராக பணியாற்றி வந்த நிலையில், தனது கனவான ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு தொடர்ந்து முயற்சித்து வந்தார். கடந்தாண்டு ஜூன் மாதம் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற அபிநயா அடுத்தடுத்த தேர்விலும் தேர்ச்சி பெற்று, நேர்முக தேர்வில் கலந்து கொண்டு முடிவுக்காக காத்திருந்தார்.
இந்நிலையில், தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அபிநயா இந்திய அளவில் 559 ஆவது நபராக வெற்றி பெற்றுள்ளார். இவரது வெற்றிக்கு பலரும் தங்களது பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிற நிலையில், அமைச்சர் வேலுமணி அபிநயாவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராம்தாஸ் பேத்தியும், அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் மகளுமான சங்கமித்ரா அன்புமணி ,…
சென்னை: இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடன் சூர்யா இணைந்துள்ள படம் மீது பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளது. படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை…
டெல்லி : இன்று மறைந்த முன்னாள் இந்திய பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் 100வது பிறந்தநாள்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அம்பேத்கர் குறித்து பேசுகையில், அம்பேத்கர் குறித்து…
குஜராத்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 ஒருநாள் போட்டிகள்…
பிரான்ஸ்: பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கு இடையில் லிஃப்ட் தண்டுகளில் தீ விபத்து ஏற்பட்டது.…