தமிழகத்தின் அடுத்த முதல்வராக வாய்ப்பு.தான் வெற்றி பெற்ற சேப்பாக்கம் தொகுதியில் அதிரடி காட்டும் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின்.
தமிழக சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து,வாக்கு எண்ணும் பணிகள் கடந்த மே 2ஆம் தேதி நடந்து முடிந்தது.வாக்கு எண்ணிக்கை தொடக்கத்திலேயே திமுக முன்னிலை வகித்து வந்தது.அதிமுக பின்னடைவையே சந்தித்தது.திமுக முன்னிலை வகித்து வந்த நிலையில் 158 இடங்களில் வெற்றி பெற்றது.அதனையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்றார்.
அதன்பின்னர்,தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற உடனே,5 முக்கிய திட்டங்களை அமல்படுத்தி அதிரடி காட்டினார்.
அந்தவகையில்,தமிழக முதல்வரின் மகனும்,சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி,தான் வெற்றி பெற்ற சேப்பாக்கம் தொகுதியின்கீழ் உள்ள பல்வேறு பகுதிகளில் நேரடியாக சென்று களஆய்வு செய்து வருகிறார்.குறிப்பாக, புதுப்பேட்டை, கொய்யா தோப்பு என்னும் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
ஏனெனில்,அந்த பகுதி எப்பொழுதும் சாக்கடையாளும், நீராலும் சூழ்ந்து காணப்படுகிறது.திடீரென்று அந்த பகுதியை உதயநிதி ஆய்வு செய்தார்.அவ்வாறு ஆய்வு செய்ததில் மக்கள் அனைவரும் தங்களின் கோரிக்கைகளை கூறினர்.அதுமட்டுமல்லாமல்,மக்கள் கோரிக்கைகளை வீடு வீடாக சென்றும் உதயநிதி கேட்டறிந்தார்.மேலும்,அந்த கோரிக்கைகளை உடனடியாக மக்களுக்கு நிறைவேற்றியும் தந்தார்.
இதுகுறித்து,அப்பகுதி மக்கள் கூறியதாவது,”இதுவரை நேரடியாக எங்களை வந்து எந்த அமைச்சரும் சந்தித்ததில்லை.நாங்கள் வைக்கும் கோரிக்கைகளை எப்போதும் நிறைவேற்றியதும் இல்லை. ஆனால், எம்.எல்.ஏ உதயநிதி அவர்கள்,மற்ற அமைச்சர்களை போல் அல்லாமல்,நேரடியாக எங்கள் பகுதிக்கு வருகை புரிந்து,எங்கள் கோரிக்கைகளை கேட்டு அனைத்தையும் உடனடியாக செயல்படுத்தி கொடுத்தது இதுவே முதல் முறையாகும்.அதுமட்டுமின்றி உதயநிதி அவர்கள் எங்களுக்கு ஹீரோ போல காட்சியளிக்கிறார்.மேலும்,அப்பாவை போன்று மக்களின் குறைகளை தீர்த்து வருவதால் இவர் தான் தமிழகத்தின் அடுத்த முதல்வராக வருவார்”,எனக் கூறினர்.
சென்னை : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது சில அரசியல் கருத்துக்களை பேசியும்…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…
தூத்துக்குடி : கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது…
சென்னை : மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் ருதுராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையில் டெல்லி…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் , அக்சர் படேல்…