சனாதனம் பற்றி நான் பேசியது சரியானதே! பாஜகவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி!

Udhaystalin

சனாதனம் குறித்த பேச்சால் சர்ச்சை எழுந்த நிலையில், அந்தக் கருத்தை தெரிவிக்க என்ன காரணம் என்று உதயநிதி விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் 2ம் தேதி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் சார்பில் சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், தற்போதைய நேரத்தில் சனாதானத்தை எதிர்ப்பதை காட்டிலும் சனாதனத்தை ஒழிப்பதே சிறந்தது என்றும், டெங்கு, மலேரியா, கொரோனா, போன்ற தொற்று நோய்களை எதிர்க்க மக்கள் போராட மாட்டார்கள், அவற்றை ஒழிக்கத்தான் செய்வார்கள். அது போல தான் சனாதனமும் ஒழிக்கப்பட வேண்டியது ஒன்று என பேசி இருந்தார். இதற்கு, கடுமையான எதிர்ப்புகள், கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உதயநிதி பேச்சுக்க கண்டனம் தெரிவித்தார். இது குறித்து அமித்ஷா பேசுகையில், காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான அரங்கில்தான் இந்து மதத்தை அவமதித்து அமைச்சர் உதயநிதி பேசியுள்ளார். உதயநிதியின் வெறுப்பு பேச்சுடன் காங்கிரஸ் உடன்படுகிறதா என்பதை அக்கட்சி தெளிவுபடுத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், சென்னையில் நேற்றிரவு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் உதயநிதி,”எதுவுமே மாறாமல் நிலையாக இருக்க வேண்டும், எல்லாம் நிலையானது என்பதுதான் சனாதனம் என்று விளக்கம் சொல்கிறார்கள். அந்த கோட்பாடுகளை ஒழிக்க வேண்டும் என்று தான் நான் சொல்கிறேன்.

எல்லாவற்றிலும் மாற்றம் ஏற்பட வேண்டும், எல்லாருக்கும் எல்லாம் என்ற நிலை உருவாக வேண்டும் என்று சொல்வதே திராவிடம். சனாதனம் பற்றி நான் பேசியது சரியானதே, அதை பாஜக திரித்து வருகிறது. இந்தியா கூட்டணி வலுப்பெறுவதை திசை திருப்பவே பாஜகவினர் சனாதனம் குறித்த பிரச்சனையை இப்போது கையில் எடுத்துள்ளனர். எப்போதுமே பொய்ச் செய்திகளை பரப்புவதுதான் பாஜகவின் வேலை என்று அமைச்சர் உதயநிதி பதிலடி கொடுத்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்