பிரதமர் மோடியை சந்தித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பு.!

Udhayanidhi Stalin

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி நடப்பாண்டில் ஜனவரி 19ஆம் தேதி முதல் ஜனவரி 31 வரை தமிழகத்தில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசின் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார்.

இப்போட்டியில் பங்கு பெறும் வீரர் மற்றும் வீராங்கணைகள் 01.01.2005 அன்றோ அல்லது அதற்குப் பின்னரோ பிறந்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.  எனவே, கேலோ இந்தியா போட்டிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் மோடியை இன்று டெல்லியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்திக்கிறார்.

இதில், குத்துச்சண்டை, துப்பாக்கி சுடுதல்,மல்லர் கம்பம், ஜூடோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடக்க உள்ளன. இதையொட்டி, டெல்லியில் பிரதமர் மோடியை இன்று விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்தார். அப்போது, கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிக்கான அழைப்பிதழை பிரதமரிடம் அவர் வழங்கினார்.

அயோத்தி ராமர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 2 பேர் கைது!

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் 2018ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020ம் ஆண்டு போட்டிகள் நடத்தப்படவில்லை. கடைசியாக 2021ம் ஆண்டில்18 வயதிற்குட்பட்டவர்களுக்கான பிரிவில் ஹரியானா மாநிலத்திலும், 2022ம் ஆண்டில் மத்தியப் பிரதேச மாநிலத்திலும் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்