திமுக கட்சியின் இளைஞரணி மாநாடு வரும் ஜனவரி 21ஆம் தேதி சேலத்தில் நடைபெற உள்ளது. இதற்கான விழா ஏற்பாடுகள் வெகு தீவிரமாக பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாடு நிகழ்வுகள் முந்தைய நாள் ஜனவரி 20ஆம் தேதி அன்று முதலே துவங்குகிறது. இது குறித்து திமுக இளைஞரணி தலைவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று செய்தியாளர்களிடம் பல்வேறு தகவல்களை தெரிவித்தார்.
தவழ்ந்து தவழ்ந்து செல்வதால் கால்வலி வருகிறது.! இபிஎஸ்-ஐ விமர்சித்த உதயநிதி.!
அவர் கூறுகையில், கடந்த வருடம் டிசம்பர் மாதமே இளைஞரணி மாநாடு நடைபெற இருந்தது. ஆனால், அந்த சமயம் ஏற்பட்ட சென்னை மிக்ஜாம் புயல் வெள்ளம், அதனை தொடர்ந்து தென்மாவட்ட கனமழை வெள்ளம் ஆகியவற்றின் காரணமாக இளைஞரணி மாநாடு இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தான் ஜனவரி 21ஆம் தேதி நடத்த திட்டமிட்டு அதற்கான வேலைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்த மாநாட்டில் சுமார் 3 முதல் 4 லட்சம் பேர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது . அவர்களுக்கான போக்குவரத்து வசதிகள், மற்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மாநில உரிமைகளை மீட்கும் மாநாடாக இந்த மாநாடு நடைபெற உள்ளது.
டிசம்பர் 20ஆம் தேதியே திமுக இளைஞரணி மாநாடு நிகழ்ச்சி ஆரம்பமாகிவிடும். டிசம்பர் 20 மாலை 5.30 மணியளவில் தலைவர் (முதல்வர் மு.க.ஸ்டாலின்) மாநாடு நடைபெறும் இடத்திற்கு வந்து விழா ஏற்பாடுகளை பார்வையிட உள்ளார். இன்று பெரியார் சிலை முன்பு துவங்கிய இளைஞரணி ஜோதி யானது 2 நாட்கள் 310 கிமீ சாலை பயணத்திற்கு பிறகு மாநாடு நடைபெறும் இடத்திற்கு கொண்டுசெல்லல்ப்படும். ஏற்கனவே 3 மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்ட இளைஞர் மாநாடு விழிப்புணர்வு இருசக்கர பேரணியினர் சுமார் 1000 பேர் தலைவருக்கு மரியாதை செலுத்த உள்ளனர்.
டிசம்பர் 21 காலை 8.45க்கு திமுக இளைஞரணி மாநாடு துவங்குகிறது. கழக துணை பொதுச்செயலாளர் எம்பி கனிமொழி கொடியேற்றி வைக்க உள்ளார். திமுக மாணவரணி தலைவர் எழிலரசன் மாநாட்டை துவங்கி வைக்கிறார். திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள உள்ளார்.
மாநாடு தொடங்கிய பின்னர் மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தப்படுகிறது. 22 பேச்சாளர்கள் தலா 10 முதல் 15 நிமிடங்கள் வரையில் மாநாடு, மொழிப்போர் தியாகிகள் உள்ளிட்டவை பற்றி உரையாற்ற உள்ளனர். பின்னர் தெருக்குரல் அறிவு நடத்தும் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது அவர், அம்பேத்கர் , அண்ணா , பெரியார் உள்ளிட்ட தலைவர்கள் குறித்து பாடல் பாட உள்ளார்.
கலைநிகழ்ச்சிகள் முடிந்த பின்னர் 4 மணி அளவில் நான் (அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்) பேச உள்ளேன். பின்னர் 5 மணியளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்ற உள்ளார்.
கடந்த 5 மாதங்களாக நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினரிடம் வாங்கப்பட்ட கையெழுத்து பிரதிகள் முதல்வரிடம் கொடுக்கப்படுகிறது. இதுவரை 85 லட்சம் பேர் கையெழுத்திட்டு உள்ளனர். அந்த கையெழுத்து பிரதிகள், முதல்வர் ஒப்புதல் பெற்ற பின்னர் மொத்தமாக குடியரசு தலைவரிடம் திமுக இளைஞரணி சார்பாக ஒப்படைக்கப்பட உள்ளது.
இந்த மாநாட்டை ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்துள்ள அமைச்சர் கே.என்.நேரு, மாவட்ட செயலாளர்கள் , இளைஞரணி நிர்வாகிகள் அனைவரும் கடுமையாக உழைத்துள்ளனர் எனவும் அமைச்சரும், திமுக இளைஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…