காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்றும், நாளையும் ஈரோட்டில் பிரசாரம்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் களம் களை கட்டி உள்ளது. இந்த சூழலில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார்.
காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவு கேட்டு, தினமும் ஒவ்வொரு திமுக அமைச்சர்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. அமைச்சர் சந்தியில் பாலாஜி, நேரு, அணைப்பில் மகேஷ், செஞ்சி மஸ்தான் உள்ளிட்ட அமைச்சரகள் அனைவரும் ஈரோட்டில் முகாமிட்டு, தேர்தல் பிரச்சாரம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்றும் நாளையும் ஈரோட்டில் பிரசாரம் செய்கிறார்.
அதன்படி, குமலன்குட்டை, கணபதி நகர், நாராயணவலசு, இடையன்காட்டுவலசு உள்ளிட்ட பகுகுதிகளில் இன்று மாலை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவு தெரிவித்து தி.மு.க. இளைஞர் அணி மாநில செயலாளரும், தமிழ்நாடு விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். இதுபோன்று, நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 4.30 மணிக்கு ஈரோடு அரசு ஆஸ்பத்திரி அருகில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2-வது நாள் பிரசாரத்தை தொடங்குகிறார்.
சென்னை : நாளை ( நவம்பர் 27.11.2024) எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்கிற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில்…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
மயிலாடுதுறை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது…
கடலூர் : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : அமரன் படத்திற்கு 300 கோடி வசூல் கிடைத்ததை விடப் பாராட்டு மழைகள் தான் பெரிய அளவில் குவிந்தது…