பிரதமர் மோடியை இன்று டெல்லியில் சந்திக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
தமிழ்நாட்டில் ஜனவரி 19 முதல் 31ம் தேதி வரை நடப்பாண்டுக்கான கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசின் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார். இது தொடர்பாக தமிழக விளையாட்டுத் துறை கூறியதாவது, கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் 2018ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டுகளில் 17 வயதிற்குட்பட்டவர்கள் மற்றும் 21 வயதிற்குட்பட்டவர்கள் என இரண்டு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020ம் ஆண்டு போட்டிகள் நடத்தப்படவில்லை. 2021ம் ஆண்டில் 18 வயதிற்குட்பட்டவர்களுக்கான பிரிவில் ஹரியானா மாநிலத்திலும், 2022ம் ஆண்டில் மத்தியப் பிரதேச மாநிலத்திலும் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
கோவையில் 3வது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை!
இந்த ஆண்டு தமிழ்நாட்டில் ஜனவரி 19 முதல் 31ஆம் தேதி வரை கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் பங்கு பெறும் வீரர் / வீராங்கணைகள் 01.01.2005 அன்றோ அல்லது அதற்குப் பின்னரோ பிறந்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே, கேலோ இந்தியா போட்டிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் மோடியை இன்று டெல்லியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்திக்கிறார்.
அதாவது, தமிழ்நாட்டில் நடைபெற உள்ள கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிக்கு அழைப்பு விடுக்க இன்று டெல்லியில் பிரதமர் மோடியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்திக்கிறார். அப்போது, கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி நிறைவு விழாவில் பங்கேற்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.