மீண்டும் எய்ம்ஸ் செங்கலை கையில் எடுத்த அமைச்சர் உதயநிதி

Udhayanidhi: எய்ம்ஸ் கட்டி முடிக்கும் வரையில் செங்கல்லை தர மாட்டேன் என அமைச்சர் உதயநிதி பேச்சு

மக்களவை தேர்தல் பிரசாரத்தை மதுரையில், விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று மேற்கொண்டார். அப்போது அவர் பேசும் போது, “கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் மோடி மதுரைக்கு வந்தார். எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிவிட்டு சென்றார். அந்த கல்லை இன்னும் பத்திரமாக வைத்துள்ளேன்.

Read More – தமிழ்நாட்டில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்

நீங்கள் மருத்துவமனையை கட்டிமுடிக்கும் வரை நான் இந்த செங்கல்லை கொடுக்க மாட்டேன். 2020ல் நாட்டை வல்லரசாக்குவேன் எனக்கூறினார். ஆனால் இப்போது 2047ம் ஆண்டு நாட்டை வல்லரசாக மாற்றுவேன் என கூறியுள்ளார். பிரதமர் தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை. ஆனால் இந்தி, சமஸ்கிருதம் மொழிகளுக்கு 5 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார்.

Read More – வீரப்பன் மகள் தேர்தலில் போட்டி! எந்த கட்சியில் தெரியுமா?

மிக்ஜம் புயல் பாதிப்பு, மற்றும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டபோது பிரதமர் தமிழகம் வரவில்லை. மழை வெள்ள நிவாரண நிதியாக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் 37 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டார். ஆனால் தமிழகத்துக்கு மத்திய அரசு ஒரு ரூபாய் நிதி கூட கொடுக்கவில்லை.” என்றார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்