இன்னும் 5 மாதத்திற்குள் இல்லத்தரசிகளுக்கு மாதம் 1000 ரூபாய் திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் உறுதியளித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர் இ,வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் நேற்று தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அந்த நிகழ்வில், அதிமுக பற்றியும், பாஜக பற்றியும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார்.
1000 ரூபாய் : அப்போது பிரச்சாரத்தின் போதே, உங்க மைண்ட் வாய்ஸ் கேக்குது.. அந்த 1000 ரூபாய் மாத உதவி தொகை தானே, அது இன்னும் அதிகபட்சம் 5 மாதத்திற்குள் செயற்படுத்தப்படும் அதற்கு நான் உறுதி என கூறினார். முன்னதாக திமுக தேர்தல் பிரச்சாரத்தில் மிக முக்கிய அறிவிப்புகளில் ஒன்றாக பார்க்கப்பட்டது மாதந்தோறும் இல்லத்தரசிகளுக்கு 1000 ரூபாய் உதவித்தொகை திட்டம்.
எதிர்கட்சிகள் விமர்சனம் : இந்த திட்டம் இன்னும் செயல்படுத்தப்படவில்லை என எதிர்க்கட்சியினர் இதே போல தேர்தல் பிரச்சாரத்தில் குறிப்பிட்டு, மாதம் 1000 ரூபாய் என்றால் இதுவரை 22 மாதம் ஆகிவிட்டது இன்னும் நிறைவேற்றி தரவில்லை என குற்றம்சாட்டி வாக்கு சேகரித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…