நீட் விவகாரத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை பாராட்ட வேண்டும் என்று ராமநாதபுரத்தில் நடைபெற்ற ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ பொதுக்கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். மேலும், ஜெயலலிதா இருந்த வரை தமிழகத்திற்குள் நீட் தேர்வு வரவில்லை எனவும் அவர் மறைந்ததும், அதிமுக ஆட்சியில் நீட் தேர்வு தமிழகத்திற்குள் வந்தது என்றும் கூறினார்.
தொடர்ந்து அவர் பேசும் போது, “நம் பிள்ளைகள் படிக்க கூடாது என்பதற்காக புதிய புதிய தேர்வுகளை திணிக்கிறார்கள், நீட் தேர்வு ரத்து தொடர்பாக டெல்லியில் போராட்டம் நடத்த இருக்கிறோம், தமிழ்நாட்டில் இருந்து என்றைக்கு நீட்தேர்வு விலக்கு ஏற்படுமோ, அதுதான் முதல் வெற்றி, 2014 தேர்தலின் போது ராமநாதபுரம் வந்த பிரதமர் மோடி பல வாக்குறுதிகளை அளித்தார், அவை வாக்குறுதிகள் அல்ல வடை தான்.
சட்டப்பேரவையில் இருக்கை மாற்றியதில் எந்த வருத்தமும் இல்லை: ஓ.பி.எஸ்
திமுக நிகழ்ச்சிகளில் இனி தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அரசு நிகழ்ச்சிகள் மட்டுமின்றி கட்சி நிகழ்ச்சிகளும் தமிழ்த்தாய் வாழ்த்துக்களுடன் தான் தொடங்கும். 40 தொகுதியிலும் நம்முடைய திமுக கூட்டணி வெல்ல வேண்டும். மதத்தை வைத்து அரசியல் நடத்த நினைக்கும் பாஜகவின் கனவு தமிழ்நாட்டில் பலிக்காது, தமிழ்நாட்டு மக்கள் தெளிவானவர்கள்” என்றார்.
சென்னை : சென்னையில் சிக்னல்கள் மற்றும் மேம்பாலங்களின் அருகே உள்ள 100க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களை 100 மீட்டர் தள்ளி…
திருச்சி : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் , தங்கள் கட்சி கூட்டணி பற்றிய கேள்விகள் குறித்தும், திமுக, பாஜக…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 4% கூடுதலாகப் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது, குமரிக்கடல்…
சென்னை ;சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 18] எபிசோடில் மீனா மீது கரிசனம் காட்டுகிறார் விஜயா.. போட்டோசூட்டினால் வந்த பிரச்சனை…
சென்னை : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் என்பது வரும் நவ-24 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெற இருக்கிறது.…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நேற்று விலகிய டெல்லி முன்னாள் அமைச்சர் கைலாஷ் கெலாட் பாஜகவில் தன்னை இணைத்து…